தமிழகம்

ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக மெரினாவில் காவல் ஆணையர் ஆய்வு

செய்திப்பிரிவு

மெரினாவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளால் சாலைகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப் பாக, பிரதான சாலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு களால் பாதசாரிகள் நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக பொதுமக்களி டம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, சென்னை யில் உள்ள முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை, லூப் சாலை, நொச்சி குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றுவது குறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் நேற்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்பகுதியில் சாலையை ஆக்கிரமித்து மீன் வியாபாரிகள் கடை வைத்துள்ளதால் கடும் போக் குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலாப் பய ணிகள் உள்ளிட்ட அனைத்து தரப் பினரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அங்குள்ள மக்களிடம் காவல் ஆணையர் விஸ்வநாதன் கருத்துகளைக் கேட் டறிந்தார். அப்போது, அவரிடம் தங்களுக்கு வியாபாரம் செய்ய மாற்று இடம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரினர். குறிப்பாக, கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் தங்களுக்கு வியாபாரம் செய்ய இடம் ஒதுக்கித் தருமாறு கூறினர். அதேபோல, பொதுமக்களும் அப்பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்றி எளிதான போக்குவரத்துக்கு வழிவகை செய்யுமாறு கோரினர்.

அனைவரது கருத்துகளையும் கேட்டறிந்த காவல் ஆணையர், இப்பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் கூறினார். இந்த ஆய்வின்போது அவருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இருந்தனர்.

SCROLL FOR NEXT