தமிழகம்

தி இந்து சார்பில் பிரம்மாண்ட வாகன கண்காட்சி: சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்குகிறது

செய்திப்பிரிவு

‘தி இந்து’ஆட்டோ எக்ஸ்போ 2016 என்ற பெயரிலான 2 நாள் பிரம்மாண்ட வாகனக் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

தொடக்க விழா நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், கவுரவ விருந்தினராக இயக்குநர் லிங்குசாமியும் கலந்துகொள்கின்றனர். காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறும்.

இந்தக் கண்காட்சியில் விதவிதமான கார்கள், புதுரக பைக்குகளை காணலாம். மேலும் பழைய மற்றும் புதிய வாகனங்களின் அணிவகுப்பும், சென்னை ஹெரிட்டேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில் பாரம்பரிய கார் அணிவகுப்பும் இடம்பெறுகிறது.

உலக அளவில் புகழ்பெற்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த வாகனங்களையும் இந்த 2 நாள் கண்காட்சியில் கண்டுகளிக்கலாம்.

SCROLL FOR NEXT