தமிழகம்

ஜல்லிக்கட்டு நடத்த சட்ட அமைச்சகம் தீவிரம்: பாஜக தலைவர் தமிழிசை தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான முயற்சியில் மத்திய சட்ட அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று எல்லோரும் விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி சென் னையில் நேற்று கூறியிருந்தார்.

இதற்கு விளக்கமளிக்கும் விதமாக தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தமிழர் பண் பாட்டோடு கூடிய ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நடத்த வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. கடந்த முறையே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால், அதற்கு முன்னால் ஏற்படுத்தப்பட்ட சட்ட சிக்கல்களாலும், உச்ச நீதிமன்ற வழக்காலும் போட்டியை நடத்த முடியவில்லை. இந்த முறை, அந்த சிக்கல்களை எல்லாம் மீறி ஜல்லிக்கட்டு போட்டி களை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய் யப்பட்டுள்ளன. இதற்கான முயற்சிகளில் சட்ட அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது.

இதில் பாஜகவின் முயற்சி களுக்கு பிற தேசிய கட்சிகளும் முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவும் தெரிவித்துள்ளன. ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்பதில் மத்திய பாஜக அரசும், தமிழக பாஜகவும் உறுதியாக உள்ளன. இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

மத்திய அரசின் குரல்

மேலும் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன், ‘ஜல்லிக் கட்டு தொடர்பாக மேனகா காந்தி கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும். அவர் விலங்குநல ஆர்வலர் என்பதால் அப்படிக் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதனை பாஜக மற்றும் மத்திய அரசின் குரலாக நான் சொல்கிறேன்’’ என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

SCROLL FOR NEXT