தமிழகம்

தி இந்து - பொதிகை தொலைக்காட்சி வழங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைத் தொடர்: 53-வது வாரமாக இன்று ஒளிபரப்பு

செய்திப்பிரிவு

இசை மேதை எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘குறையொன்றுமில்லை’ என்ற தொடர் நிகழ்ச்சி பொதிகை தொலைக்காட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியைப் பொதிகை தொலைக்காட்சியுடன் இணைந்து ‘தி இந்து’ வழங்குகிறது.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களின் தொகுப்பான இந்த நிகழ்ச்சி மேலும் 10 வாரங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இன்று இரவு ஒளிபரப்பாகும் 53-வது அத்தியாயத்தில் அமெரிக்காவில் கார்னெகி அரங்கில் எம்.எஸ்.சுப்புலட்சுமி வழங்கிய இசை நிகழ்ச்சி பற்றியும், ஸ்ரீகாமாட்சி சுப்ரபாதம் பற்றியும் சுவையான செய்திகள் இடம்பெறவுள்ளன. மேலும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அரிய புகைப்படங்கள், தகவல்களின் தொகுப்பும் இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்குப் பொதிகை தொலைக்காட்சியில் காணலாம்.

SCROLL FOR NEXT