தமிழகம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம்: ராம கோபாலன் உறுதி

செய்திப்பிரிவு

மத்திய அரசு ஆதரவு அளித்தா லும், அளிக்காவிட்டாலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலன் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் நேற்று இந்து முன்னணி அமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: விழுப்புரம் ஆதிவாலிஸ் வரன் கோயிலுக்கு சொந்தமான குளத்தை சுத்தப்படுத்தி கோயிலிடம் ஒப்படைக்க வேண்டும். கோயிலில் ஆடை கட்டுப்பாடு குறித்து விமர்சித்த இளங்கோவன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10 கோரிக்கைகள்

2016 சட்டப்பேரவை தேர்தலில், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட எங்களுடைய 10 கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிக்கு ஆதரவளிப்போம் என்றார்.

SCROLL FOR NEXT