தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் இன்று முதல் மழை வாய்ப்பு குறையத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, காற்றழுத்த தாழ்வுநிலையானது, தென் கிழக்கு அரபிக்கடல் முதல் கோவா வரை நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் இன்று முதல் மழை வாய்ப்பு படிப்படி யாக குறையும். அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொருத்தவரை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத் தில் ஓரிரு இடங்களிலும் மித மான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட் டத்துடன் காணப்படும்.
வெப்ப நிலையை பொருத்தவரை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பாப நாசத்தில் 9 செமீ, குன்னூரில் 7 செமீ, ஆரணியில் 4 செமீ, பெரியகுளம், விளாத்திகுளம், அரூரில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.