தமிழகம்

விவசாயிகளின் கண்ணீரை துடைக்காமல் நெல் கொள்முதலை கணினிமயமாக்கி என்ன பயன்? - திமுக தலைவர் கருணாநிதி கேள்வி

செய்திப்பிரிவு

விவசாயிகளின் கண்ணீரை துடைக்காமல் நெல் கொள்முதலை கணினிமயமாக்கி என்ன பயன் என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று கேள்வி - பதில் வடிவில் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

சட்டப்பேரவை தொடங்கி இத்தனை நாட்களாகியும் 110-வது விதியின் கீழ் அறிக்கை வரவில் லையே என நினைத்துக் கொண் டிருந்தேன். ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடை பெற்று அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் அறிவிப்புகளை செய்வார்கள். ஆனால், அதிமுக ஆட்சியில் அனைத்து அறிவிப்பு களையும் 110-வது விதியின் கீழ் முதல்வரே படித்து விடுகிறார். நடப்பாண்டில் ரூ.13 கோடியே 43 லட்சத்தில் நெல் கொள்மு தல் கணினி மயமாக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். விவசாயிகளின் கண்ணீரை துடைக்காமல் நெல் கொள்முதலை கணினி மயமாக்கி என்ன பயன்?

அதிக வருவாய் வரும் பருப்பு, எண்ணெய் வகைகளுக்கு வரி வாங்காமல் அதானி மற்றும் ராம்தேவ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவி செய்வ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ள து. தனியார் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட முக்கியப் பொருட்கள் மீதான உள்ளூர் வரியை நீக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு யோசனை கூறியிருப்பதாகத் தெரிகிறது. அதானிக்கு லாபம் கிடைக்கும் என்றால் மோடி அரசு எதையும் செய்யும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

கரூரில் ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமான அன்புநாதன் வீடு, கிடங்குகளில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே சோதனை நடத்தினார். இப்போது அவர், சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நேர்மை யாக பணியாற்றினால் இது போன்ற தண்டனைக்குதான் ஆளாக நேரிடும்.

குஜராத் மாநிலத்தில் பொரு ளாதார அடிப்படையில் வழங்கப் பட்ட இட ஒதுக்கீடு செல்லாது என அந்த மாநில உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது வரவேற்கத்தக்க தீர்ப்பாகும். இட ஒதுக்கீடு சமூக அடிப்படையில் பிற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பதே திமுகவின் கொள்கையாகும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப் பேரவையை கவிழ்ந்த கப்பல் போன்ற கட்டிடத்துக்கு மாற்றியது ஏன் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். அப்படியெனில் அதிமுக ஆட்சியில் புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது ஏன்? கவிழ்ந்த கப்பல் போன்ற கட்டி டத்தில் அரசு உயர் சிறப்பு மருத் துவமனையை நடத்துவது ஏன்? இதையெல்லாம் பார்க்கும்போது கவிஞர் கண்ணதாசனின், ‘பரம சிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா?’ என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

இவ்வாறு கருணாநிதி கூறி யுள்ளார்.

SCROLL FOR NEXT