தமிழகம்

வங்கிகளில் செலுத்திய பெருந்தொகை: விளக்கம் அளிக்காதோர் மீது வருமான வரித்துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

வருமானவரித் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் தங்கள் கணக்கில், பெருந்தொகையை செலுத்தியவர்கள் அது குறித்து வருமான வரித் துறைக்கு incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் மூலம் சரியான பதில் அளிக்க வேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே குறிப்பிட்ட நாட்களுக்குள், சரியான பதில் அளிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், வருமான வரி குறித்து ஆய்வு செய்ய வரும் அலுவலர்களின் நம்பகத் தன்மையை உறுதி செய்துகொள்ள பொதுமக்கள் அந்த அலுவலர்களின் அடையாள அட்டையை சரி பார்க்கவும். ஏதேனும் சந்தேகம் இருப்பின், வருமான வரித் துறை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொலைபேசி எண்கள்: வருமான வரித் துறை ஆணையர் (நிர்வாகம் & டி.பி.எஸ்) 044-28338653 , மக்கள் தொடர்பு அலுவலர் 044-28338314, 28338014.

வருமானவரித் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT