தமிழகம்

இந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து சென்னையில் அனைத்துக் கட்சி மாநாடு: கி.வீரமணி தகவல்

செய்திப்பிரிவு

இந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சி மாநாடு நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்தியில் உள்ள பாஜக அரசு, இந்துத்துவா கொள்கையை திணிக்க முயற்சித்து வருகிறது. அதன் முன்னோட்டமாக சமஸ் கிருதம் - இந்தி மொழிகளைத் திணிப்பதில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஈடுபட்டு வருகிறது. இந்த பண்பாட்டு படையெடுப்பை முறியடிக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை பெரியார் திடலில் ஒருமித்த கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து இந்தி - சமஸ்கிருத எதிர்ப்பு மாநாடு நடத்துவது என சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

புதிய கல்வி முறை என்ற பெயரால் நுழைக்கப்படும் நவீன குலக்கல்வித் திட்டத்துக்கு கண்டனம், நுழைவுத் தேர்வு என்பதை அறவே ரத்து செய்ய வேண்டும், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் இக்கூ ட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT