முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரி வித்துள்ளனர்.
முதல்வர் ஜெய லலிதா உடல்நலக் குறைவு காரண மாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய ரஜினி காந்த், கமல்ஹாசன் இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ள ரஜினி காந்த், “அன்புள்ள முதல்வர் அவர் கள் விரைவில் நலமடைய இறை வனை பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். நடிகர் கமல் ஹாசன், ‘‘மாண்புமிகு முதல்வர் விரைவில் நலம்பெற வாழ்த்து கிறேன்’’ என்று ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்து வாழ்த்து
முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் முழுநலம் காண முழு மனதோடு வாழ்த்துகிறேன். தமிழக முதல்வர் உடல்நலம் பெற வாழ்த்தியிருக்கும் கர்நாடக முதல்வர், அந்த உடல்நலக் குறை வுக்கான காரணத்தையும் அறிந் திருப்பார் என்பதில் ஐயமில்லை. நீர்ச்சத்துக் குறைவுதான் முதல மைச்சரின் உடல்நலக் குறைவுக்கு முதற்காரணமென்று மருத்துவ அறிக்கை சொல்கிறது. ஓர் உடம்பில் நீர்ச்சத்து குறைந்தாலே உடல்நலம் சீர்கெடும் என்றால், மாநிலத்தின் நீர்ச்சத்து குறைந் தால் தமிழ்நாட்டின் நலம் எவ் வளவு கெடும் என்பதைக் கர்நாடக முதலமைச்சர் அறியாதவர் அல்லர்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் நலத்தில் அக்கறை கொண்ட கர்நாடக முதலமைச்சர் தமிழ்நாட்டு நலத்திலும் அக்கறை காட்ட வேண்டுமென்று ஒரு விவசாயி மகன் என்ற முறையில் வேண்டு கோள் விடுக்கிறேன்.