காவிரி நீர் பிரச்சினைக்காக தீக் குளித்து உயிரிழந்த இளைஞர் விக்னேஷின் உடலுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வ லத்தில் சீமான், பி.ஆர்.பாண்டியன், வைகோ மற்றும் அரசியல் பிரமுகர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடக அரசைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் செப்டம்பர் 15-ம் தேதி பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ்(25) தீக்குளித் தார். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் மன்னார்குடி ராஜ கோபால சுவாமி கோயில் மேல வீதியில் உள்ள அவரது இல்லத் துக்கு நேற்று அதிகாலை 2 மணிக்கு கொண்டுவரப்பட்டது.
அவரது உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப் பினர் சி.மகேந்திரன், துணைச் செயலாளர் பழனிசாமி, திமுக சட்ட திட்டக்குழு உறுப்பினர் ஒரத்த நாடு ராஜமாணிக்கம், தமிழக பாஜக மாநில துணைத் தலை வர் கருப்பு முருகானந்தம், தமிழ் நாடு கலை இலக்கிய பெரு மன்ற மாநிலச் செயலாளர் ரா.காம ராசு, சென்னைவாழ் காவிரி மைந்தர் கள் அமைப்புத் தலைவர் சிவராஜ சேகரன் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள், லாரி உரிமையாளர் கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்பினரும் அஞ்சலி செலுத்தி யதுடன், இறுதி ஊர்வலத்திலும் கலந்துகொண்டனர்.
காவிரி பிரச்சினைக்காக உயிரி ழந்த விக்னேஷின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அவரது உடல் முன் அனைவரும் உறுதியேற்ற னர். அதன்பின், அவரது உடல் ஊர்வலமாக மூவநல்லூர் சுடுகாட் டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு விக்னேஷின் உடலுக்கு அவரது தந்தை பாண்டியன் தீ மூட்டினார். விக்னேஷின் இறுதி ஊர்வலத்தையொட்டி, மன்னார்குடியில் காலை 11 மணி வரை வர்த்தகர்கள் கடைகளை அடைத்து, அஞ்சலி செலுத்தினர்.