சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் (6 முதல் 18 வயது வரை) மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம் 7 மாநகராட்சி மண்டலங்களில் நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: செவித்திறன் குறைபாடு, பார்வைத் திறன் குறைபாடு, மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 7 மண்டலங்களில் உள்ள 10 இடங்களில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் முடநீக்கு வல்லுநர், காது மூக்கு தொண்டை மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் ஆகியோர் குழந்தைகளை பரிசோதித்து, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, உபகரணங்கள் உதவி மற்றும் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்வார்கள். இதில் 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் பங்கேற்கலாம்.
முகாமுக்கு வருபவர்கள் குழந்தைகளின் 4 புகைப்படங்கள், வருவாய் சான்று, மருத்துவச் சான்று மற்றும் அடையாள அட்டை நகல் கொண்டு வர வேண்டும். அனைத்து முகாம்களும் காலை 9.30 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.
ராயபுரம் மண்டலத்தில் சென்னை நடுநிலைப்பள்ளி, சூளை, சென்னை 112 என்ற முகவரியில் ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுகிறது சென்னை உருது பெண்கள் தொடக்கப்பள்ளி, எண்.71, அரத்தூண் சாலை, ராயபுரம் என்ற முகவரியில் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறுகிறது.
திரு.வி.க. நகர் மண்டலத்தில், சென்னை தொடக்கப் பள்ளி, டிவிகே.நகர், பெரம்பூர் என்ற முகவரியில் ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுகிறது.
தேனாம்பேட்டை மண்டலத்தில், சென்னை சமுதாய கல்லூரி, 24, அருணாச்சலம் தெரு, திருவல்லிக்கேணி என்ற முகவரியில், ஆகஸ்ட் 2-ம் தேதி முகாம் நடைபெறுகிறது.
சென்னை நடுநிலைப்பள்ளி, ராமா தெரு, வள்ளுவர் கோட்டம் (சுதந்திர தின பூங்கா அருகில்), நுங்கம்பாக்கம் என்ற முகவரியில் ஆகஸ்ட் 4-ம் தேதி முகாம் நடைபெறுகிறது.
கோடம்பாக்கம் மண்டலத்தில், சென்னை நடுநிலைப்பள்ளி, பிரகாசம் சாலை, பனகல் பார்க் அருகில், தியாகராயநகர் என்ற முகவரியில் ஆகஸ்ட் 2-ம் தேதி முகாம் நடைபெறுகிறது.
சென்னை தொடக்கப் பள்ளி, 4-வது பிரதான சாலை, சி.ஐ.டி. நகர், நந்தனம் என்ற முகவரியில், ஆகஸ்ட் 5-ம் தேதி முகாம் நடைபெறுகிறது.
தண்டையார்பேட்டை மண்ட லத்தில், சென்னை நடுநிலைப் பள்ளி, 13, புத்தா தெரு, கொருக்குப்பேட்டை என்ற முகவரியில் ஆகஸ்ட் 3-ம் தேதி முகாம் நடைபெறுகிறது.
அண்ணா நகர் மண்டலத்தில், சென்னை நடுநிலைப்பள்ளி, மெக் நில்கோலஸ் சாலை, சேத்துப்பட்டு என்ற முகவிரியில் ஆகஸ்ட் 4-ம் தேதி முகாம் நடைபெறுகிறது.
அடையாறு மண்டலத்தில், சென்னை தொடக்கப் பள்ளி, 29-வது குறுக்குத் தெரு, இந்திரா நகர், அடையாறு என்ற முகவரியில், ஆகஸ்ட் 5-ம் தேதி முகாம் நடைபெறுகிறது.
இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.