மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் குளச்சல் வர்த்தக துறைமுக திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்’ என மீனவர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அகில இந்திய மீனவர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மா.கி.சங்கர் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ஏ.சத்தியசீலன், செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் பி.ரவி முன்னிலை வகித்தனர். தலைவர் ஏ.சவுந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:
மத்திய அரசு மீனவர்களை கடல் பழங்குடியினராக அறிவிக்க வேண்டும். தென் தமிழகத்தில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் குளச்சல் வர்த்தக துறைமுக திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு 5 ஆயிரம் ஆழ்கடல் மீன்பிடி படகை தமிழக மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்குவதுடன், ஆழ்கடல் படகை அடமானமாக வைத்து பிணை இல்லாத வங்கிக் கடன் வழங்க வேண்டும்.
விசைப் படகுகளுக்கு டீசல் மானியம் ஆயிரத்து 500 லிட்டரில் இருந்து 3 ஆயிரம் லிட்டராகவும், பைபர் படகுகளுக்கு 300 லிட்டரில் இருந்து 600 லிட்டராகவும் உயர்த்தி வழங்க வேண்டும். மானியம் முழுவதும் மீனவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்கள் கடலில் தொழில் செய்யும்போது இறந்தாலோ அல்லது காயமடைந்தாலோ முதல மைச்சர் நிவாரண நிதி வழங்குவது போல் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் வழங்க வேண் டும். மேலும், கடந்த 30 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன.