தமிழகம்

சுப்புலட்சுமி ஜெகதீசன் பேட்டி திமுகவுக்கு உடன்பாடில்லாதது: ஸ்டாலின்

செய்திப்பிரிவு

முதல்வர் பன்னீர்செல்வம் ஆட்சியமைக்க திமுக ஆதரவு அளிக்கும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் என்று அளித்த பேட்டி திமுகவுக்கு உடன்பாடில்லாதது என்று செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:

தி.மு.க துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரான திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியமைக்க திராவிட முன்னேற்றக் கழகம் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று அளித்த பேட்டி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு உடன்பாடு இல்லாதது.

தற்போது தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கப்பட வேண்டிய நிலை குறித்து தலைவர், பொது செயலாளர் ஆகியோர் தான் உரிய நேரத்தில் உரிய ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார்கள். அதற்கிடையில் கழக நிர்வாகிகள் யாரும் தனிப்பட்ட முறையில் இது மாதிரி கருத்துகள் எதையும் வெளியிடக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT