தமிழகம்

கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க சுவாமி வலியுறுத்தல்

பிடிஐ

பாஜக மூத்த தலைவர் சுப்பிர மணியன் சுவாமி நேற்று விடுத்துள்ள அறிக்கையில், “தேசிய ஜனநாயக கூட்டணியின் தேசிய கண்ணோட்டத்துக்கு எதிரான மதிமுகவின் கருத்துகள் தொடர்பாக, அக்கட்சியை கூட்டணியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்.

தேசிய உணர்வுகளுக்கு எதிராகவும், பிரிவினைவாத கருத்துகளையும் வைகோ பேசிவரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுக நீடிக்க வேண்டுமா என்பதை பரிசீலிக்குமாறு கட்சித் தலைவர் அமித்ஷா மற்றும் கட்சியின் தமிழக பொறுப்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோரிடம் பேசியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT