தமிழகம்

குற்றங்களை தடுக்க மொபைலில் தகவல் பெற புது ‘சாப்ட்வேர்’: தமிழகம் முழுவதும் பரவலாக்க திட்டம்

என்.சன்னாசி

மதுரையைத் தொடர்ந்து வழிப்பறி, விபத்து போன்ற குற்றங்களை முன்கூட்டியே தடுக்க, மொபைல் போனில் புகார் தெரிவிக்கும் புதிய சாப்ட்வேர் திட்டம் தமிழகம் முழுவதும் பரவலாக்கும் முயற்சியில் மதுரை குழுவினர் இறங்கியுள்ளனர்.

மதுரை உட்பட பெரு நகரங்களில் நாளுக்கு, நாள் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. ‘‘திருடனா பார்த்து திருந்தாவிடில் திருட்டு ஒழியாது’’ என்பது போல குற்றச் செயல் புரிவோர் அவரவராக திருந்தினால் மட்டும் குற்றம் குறைய வாய்ப்புள்ளது.

இது போன்ற சூழலில் குற்றங் களை முன்கூட்டியே தடுக்க, நவீன தொழில் நுட்பம் மூலம் குற்றம் குறைக்கும் நோக்கில், போலீஸ் நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்றம் வகை யில் தொழில் நுட்பக் கல்வி படித்த சில இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

மதுரையை சேர்ந்த பொறியா ளர் தினேஷ்பாண்டியன் தலைமை யில் செந்தில், வைஷ்ணவி, ஆண்டாள் ஆகியோர் அடங் கிய குழுவினர் ‘மதுரை சிட்டி ஆப்’ என்ற சாப்ட்வேரை உருவாகி அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த தொழில் நுட்பம் மூலம் ஆபத்துக்களில் சிக்குவோர், வழியில் குற்றச் சம்பவங்களை மொபைல்கள் மூலம் தகவல்களை போலீஸார் விரைந்து பெற்று, நடவடிக்கை எடுக்கலாம்.

இதற்காக குற்றத்தடுப்பு மையம் (கிரையம் பிரிவென்ஷன் டீம்) மதுரை நகர் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. உயிரை காப்பாற்று, மெயிலில் புகார், ‘டிராபிக் ‘அப்டேட்’ இன்ஸ்பெக்டர்கள், உயரதி காரிகளை பெயர், மொபைல் நம்பர்களை தெரிந்து கொள்ளும் வசதி என, 4 வித வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஆன்ட்ராய்டு’ மொபைல் பயன்படுத்துவோர் இந்த வசதியை பயன்படுத்தி தகவல் தெரிவிக்கலாம். பிளே ஸ்டோரில் முகநூல் முகவரியை டவுன் லோடு செய்தால் இவ்வசதியை பெறலாம்.

இது மதுரையில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உயிரை காப்பாற்றும் வசதியால் ஒரு மாதத்தில் 400 விதமான தகவலும், மெயில் மூலம் புகார்களும், இந்த ஆப் வசதியை டவுன் லோடு செய்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2,330 ஆகவும் அதிகரித்துள்ளது. போலீஸ் ஒத்துழைப்புடன் இப்புதிய வசதியை அனைத்து மாவட்டத்திற்கும் விரிவுப்படுத்தும் முயற்சியிலும் அக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

பொறியாளர் தினேஷ் பாண்டியன்: போலீஸ் ஒத்து ழைப்பு இருந்தால் மட்டுமே இத்திட்டம் வெற்றி பெறமுடியும். மதுரையை தொடர்ந்து பிற மாவட்டத்திலும் பரவலாக்க, அந்தந்த மாவட்ட போலீஸ் உயரதிகாரிகளுடன் பேசி வருகிறோம்.

2014ல் மும்பையில் இது போன்ற வசதியை துவங்கினர். ஆனால் புகார்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு சென்றது. இன்ஸ்பெக்டர்களிடம் இருந்ததால் புகார் குறித்த விவரம் உயரதிகாரிகளுக்கு தெரிவதில்லை. இத்திட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பற்றிய புகாரும், கமிஷனர், எஸ்.பி.,க்களுக்கு தெரியும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. எந்த புகாரையும் மறைக்க முடியாது.

கமிஷனர், எஸ்.பி, அலு வலங்களில் இதற்கென பிரத்யேக மையம் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். 90 சதவீதம் பேர் ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துகின்றனர். தமிழகம் முழுவதும் இத்திட்டம் பரவலாக்கும்போது, விபத்து, ஆள் கடத்தல், வழிப்பறி போன்ற பல்வேறு குற்றங்களை தடுக்கலாம், என்றார்.

SCROLL FOR NEXT