உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
உலக புகையிலை ஒழிப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார் பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தொடக்க நிகழ்ச்சி மருத்து வமனை முன்பு நேற்று நடந்தது.
மருத்துவமனை துணைத் தலைவர் ஹேமந்த்ராஜ் நிகழ்ச் சிக்கு தலைமை தாங்கினார். கூடுதல் இயக்குநர்கள் செல்வ லட்சுமி, சுவாமிநாதன், புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் விதுபாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல் துணை ஆணையர் (அடையாறு) சுந்தரவடிவேல், போக்குவரத்து காவல் துணை ஆணையர் (தெற்கு மண்டலம்) அரவிந்தன் ஆகியோர் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தனர். சோழிங்கநல்லூர் வரை சென்று திரும்பிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.