தமிழகம்

வள்ளுவர் கோட்டத்தில் காட்டன் பேப் கண்காட்சி ஜூன் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காட்டன் பேப் 2017 கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை இக்கண்காட்சி நடைபெறும்.

இக்கண்காட்சியில் 15 மாநிலங் களைச் சேர்ந்த 125 கைவினை கலை ஞர்களால் தயாரிக்கப்பட்ட கைத்தறி ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு கிடைக் கும். லக்னோவில் தயாரான சிக்கன் வேலைப்பாடு கொண்ட சுடிதார், சேலைகள்; குஜராத்தின் எத்னிக் பிரின்ட் குர்தீஸ், டிரஸ் மெட்டீரி யல்; ராஜஸ்தானின் கோட்டாதோ ரியா துணி ரகங்கள், பெண்களுக் கான சோளி, பந்தேஜ் சூட்ஸ், மேலா டைகள்; மத்தியப் பிரதேசத்தின் சந்தேரி சல்வார் ரகங்கள், மகேஸ் வரி சல்வார், பத்திக் பிரின்ட் டிரஸ் மெட்டீரியல் போன்றவை கிடைக்கும்.

அதேபோல மேற்கு வங்கத்தில் தயாரான சாந்தி நிகேதன் டன்ட் சேலை, காந்தா சேலை, தக்காய் ஜம்தானி சேலை; ஒடிசாவிலிருந்து சம்பல்புரி இக்கத் சேலைகள்; ஆந்திரத்தின் கலம்காரி வெஜிடபிள் டை சேலைகள்; தமிழகத்தின் மதுரை சேலைகள், பர்தா மற்றும் படுக்கை விரிப்புகள் ஆகியவற்றையும் வாங்க லாம்.

மேலும் உத்தரப்பிரதேசம் பனாரஸ் சில்க், சட்டீஸ்கர் சில்க் டிரஸ் மெட் டீரியல், ஜார்க்கண்ட் சில்க் சேலைகள், இமாச்சல் காட்டன் குர்தீஸ், ராஜஸ்தான் ஸ்டோன் நகைகள், டெல்லி பேன்சி ரக நகைகள், வீடுகளை அலங்கரிக்கும் கலைப் பொருட்களும் கிடைக்கும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT