தமிழகம்

ஆர்.கே.நகருக்கு செலவின பார்வையாளர் 24-ல் வருகை: 256 வாக்குச் சாவடிகள் அமைப்பு- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

செய்திப்பிரிவு

இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் 256 வாக்குச்சாவடிகள் அமைக் கப்படும். செலவினப் பார்வை யாளராக நியமிக்கப்பட்டுள்ள அபர்ணா வில்லூரி வரும் 24-ம் தேதி தனது பணியைத் தொடங்குவார் என்று என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் ராஜேஷ் லக்கானி நேற்று கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவால் காலியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியுள்ளது. 23-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

ஆர்.கே.நகர் தொகுதியில் 1,28,305 ஆண்கள், 1,34,307 பெண்கள், 109 மூன்றாம் பாலித்தனவர் என மொத்தம் 2,62,721 வாக்காளர்கள் உள்ளனர். மொத்த வாக்காளர்களில் 18 - 19 வயதினர் 2,991 பேர், 20 - 29 வயதினர் 72,756 பேர், 30 - 39 வயதினர் 71,663 பேர், 40 - 49 வயதினர் 54,222 பேர், 50 - 59 வயதினர் 34,115 பேர், 60 - 69 வயதினர் 18,012 பேர், 70 - 79 வயதினர் 7,134 பேர், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1,828 பேர் உள்ளனர்.

தொகுதியில் 256 வாக்குச்சாவடி கள், 51 வாக்குச்சாவடி மையங் கள் அமைக்கப்பட உள்ளன. 1,024 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 256 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 1,535 அலுவலர்கள், 307 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 1,842 பேர் தேர்தல் பணியில் ஈடு படுத்தப்பட உள்ளனர். தொகுதிக் கான செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அபர்ணா வில்லூரி வரும் 24-ம் தேதி தனது பணியைத் தொடங்குகிறார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 2011 சட்டப்பேரவை தேர் தலில் 72.7 சதவீதம், 2014 மக்கள வைத் தேர்தலின்போது 64.10 சதவீதம், 2015 இடைத்தேர்தலில் 74.62 சதவீதம், 2016 பேரவைத் தேர்தலில் 68.38 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.

SCROLL FOR NEXT