தமிழகம்

கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட 8 இடங்களில் திருவள்ளுவர் சிலை திறப்பு: 30 பேர் கொண்ட குழுவினர் இலங்கை பயணம்

செய்திப்பிரிவு

இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுகிறது.

தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் தலைமையில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கம் தனது தமிழ்ப் பணிகளின் ஓர் அங்கமாக இந்தியாவில் ரிஷிகேஷ், நவி மும்பை, அந்தமான், விசாகப் பட்டினம் ஆகிய இடங்கள் மற்றும் அமெரிக்கா, மலேசியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான கிளிநொச்சி, மன்னார் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக் களப்பு, புத்தளம், புளியங் குளம் உள்ளிட்ட 16 இடங்களில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முடிவு செய்தது.

இதற்காக பைபரால் 16 திருவள்ளுவர் சிலைகள் வடி வமைக்கப்பட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் 8 சிலைகள் நிறுவப்பட்டு விட்டன. மீதமுள்ள 8 சிலைகள் வரும் 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நிறுவப்படவுள்ளன.

இதுதொடர்பாக இலங்கை கல்வி அமைச்சர் வி.ராதாகிருஷ் ணன், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் வி.ஜி.சந்தோஷம், மறவன்புலவர் க.சச்சிதானந்தம் ஆகியோர் சென்னையில் செய்தி யாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி தெரிவிப்பதாவது:

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் 16 சிலைகள் திறக்கப்படுகிறது. ஒவ்வொரு சிலையும் ரூ.1.50 லட்சம் மதிப்புடையது. 8 சிலைகள் தென்மாகாணங்களில் திறக்கப்பட்டுவிட்டது. வடக்கு, வடமேற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் வரும் 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சிலைகள் திறக்கப்படுகிறது. 17-ம் தேதி கிளிநொச்சியில் திருக்குறள் மாநாடு நடைபெறுகிறது. 22-ம் தேதி கொழும்பில் நடக்கும் சிலை திறப்பு விழாவில் இலங்கை அமைச்சர்கள், சபாநாயகர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதற்காக வி.ஜி.சந்தோஷம் தலைமையில் நீதிபதிகள், கல்வி யாளர்கள், எழுத்தாளர்கள் என 30 பேர் கொண்ட குழுவினர் இலங்கை செல்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பேட்டியின் போது தொழிலதி பர்கள் அபுபக்கர், விஜிபி ராஜாதாஸ், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT