தமிழகம்

நதிகள் இணைப்பு: குமரி அனந்தன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மக்களின் நல்வாழ்வை காக்க நாட்டில் உள்ள அனைத்து நதிக ளையும் மத்திய அரசு இணைக்க வேண்டுமென காந்தி பேரவையின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டின் வட ஆற்காடு மாவட்ட எல்லையில் ஆந்திர மாநிலம் தொடங்குகிறது. வாணி யம்பாடியை அடுத்துள்ள ஆந்தி ராவின் பெரும்பள்ளம் என்ற இடத் தில் கனகநாச்சியம்மன் கோயில் உள்ளது. ஆண்டாண்டு காலமாகத் தமிழர்கள் வழிபட்டு வந்த இக்கோயிலுக்கு செல்ல பாலாற்றில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

முதலில் 5 அடி உயரத்துக்கு தடுப்பணை கட்டிய ஆந்திர அரசு இப்போது அதை 12 அடியாக உயர்த்தி கட்டியுள்ளது. இதுவரை 2000 ஏக்கர் நிலத்துக்கு வந்து கொண்டிருந்த நீர் முற்றிலுமாக நின்றுபோனது. ஒவ்வொரு மாநில மும் இவ்வாறு நடந்துகொண்டால் விளைச்சலற்ற லட்சக்கணக்கான விளைநிலங் களைக் கொண்ட நாடாக இந்தியா மாறிவிடும். இந்திய நதிகளில் ஓடும் தண்ணீரில் இப்போது 69 சதவீதம் கடலில் கலந்து வீணாகிறது. இந்திய நதிகளை இணைக்கக் கோரி காந்தி பேரவை சார்பில் பல்வேறு நிகழ்ச் சிகளை நடத்தினோம். தற்போ துள்ள மத்திய அரசு பாரத ஒருமைப் பாட்டையும், பாரத மக்களின் நல்வாழ்வையும் காப்ப தற்கான தீவிர முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT