தமிழகம்

விராலிமலையில் மயில்கள் சரணாலயம்: இளைஞர்கள் தீவிர முயற்சி

கே.சுரேஷ்

விராலிமலையில் மலை மீது உள்ள சுப்பிரமணியர் கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான மயில்கள் முன்னர் சுற்றித் திரிந்தன. மேலும், சில அரிய வகை மயில் இனங்களும் இங்கு இருந்தன. இதனால் தமிழகத்தில், மயில்கள் சரணாலயமாக விராலிமலை அழைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டு களாக கோயிலில் குரங்குகள் அதிகமாக சுற்றித் திரிவதாலும் தண்ணீர் மற்றும் தீவனப் பற்றாக் குறையாலும் இங்கு இருந்த மயில்கள் குறைந்துவிட்டன. கோயி லில் உள்ள மயில்களைப் பாது காத்து, சரணாலயமாக்க வேண்டும் என பல்வேறு துறை அலுவலர் களிடம் வலியுறுத்தியும் நட வடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, விராலிமலை யைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மயில்களைப் பாதுகாக்கும் முயற்சியிலும் மயில்கள் சரணா லயமாக மாற்றவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, மயில்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட் டுள்ள விராலிமலையைச் சேர்ந்த எம்.மணிகண்டன் கூறியதாவது:

தமிழக அரசின் 8-ம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தில் தமிழ்நாட்டின் மயில்கள் சரணா லயம் விராலிமலை என குறிப் பிடப்பட்டு உள்ளது. மேலும், டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளிலும் இது கேள்வியாகக் கேட்கப்படுகிறது. இப்படி இருந்தும், இதை தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. சரணாலயமே இல்லை என வனத் துறையினர் கூறுவது அதிர்ச்சியாக இருக்கிறது.

மலையின் அடிவாரத்தில் இருந்து உச்சி வரை ஆயிரக்கணக் கில் இருந்த மயில்களின் எண் ணிக்கை, தற்போது நூற்றுக்கும் குறைவாகவே உள்ளது. எனினும், இருக்கும் மயில்களைக் காப்பாற்ற, மலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தூர்ந்து காணப்பட்ட மயில்களுக்கான தண்ணீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றப் படுகிறது. கூடுதலாக ஒரு தொட்டியும் கட்டப்பட் டுள்ளது. மேலும், மயில்களுக்கு இரை போடுவதற்காக தனியாக இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அர்ச்சனைத் தட்டுகள் விற் பனை செய்யும் கடைகளில் மயில்களுக்குப் போடுவதற்காக கம்பு, வரகு, அரிசி போன்ற தீவனப் பொட்டலங்களை இலவச மாக வழங்குகிறோம். இந்த இரை பொட்டலங்களை, அதை போடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் பக்தர்களே போட்டுச் செல்கின்றனர்.

இந்த பழக்கத்தை வழக்க மாக்கி விட்டால், மயில்களை கடவுளின் அம்சமாகக் கருதியாவது அவற்றை பாதுகாக்கும் எண்ணம் மக்களுக்கு ஏற்படும். பின்னர், அவரவர் வீடுகளில் இருந்தே தானியங்களைக் கொண்டுவந்து மயில்களுக்கு கொடுக்கும் நிலை உருவாகலாம் என நாங்கள் நம்புகிறோம்.

மேலும், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களின் உதவியுடன் விராலிமலையை மயில்களின் சரணாலயமாக உண் மையிலேயே மாற்றிக் காட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள் ளோம் என்றார்.

இரையைத் தேடி இடம்பெயர்ந்த மயில்கள்

தண்ணீர் மற்றும் போதிய இரை கிடைக்காததால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை பகுதியில் இருந்து சுற்று வட்டார மாவட்டங்களில் தண்ணீர் உள்ள, விவசாயம் நடைபெறும் பகுதிகளுக்கு மயில்கள் இடம் பெயர்ந்துவிட்டன. குறிப்பாக திருச்சி மாவட்டம் பச்சைமலை பகுதியைச் சுற்றிலும் போதிய தண்ணீர் கிடைப்பதால் நெல், சூரியகாந்தி, மக்காச் சோளம் என பலவகையான சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். எனவே, தண்ணீர் மற்றும் இரை கிடைப்பதால் அப்பகுதியில் மயில்கள் அதிக அளவு உள்ளதாகவும், மகசூல் பாதிப்பு ஏற்படும் அளவுக்கு தற்போது மயில்களின் எண்ணிக்கை பெருகிவிட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT