துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பதவி களில் 85 காலியிடங்களை நிரப்புவதற் கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத்தேர்வு கடந்த 19-ம் தேதி நடை பெற்றது. இத்தேர்வை தமிழகம் முழு வதும் ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர்.
இந்த நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டுள்ளது.