முதல்வரின் தொடர் முயற் சியால் இலங்கை சிறையில் இருந்து 43 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஓரிரு நாட்களில் மீதமுள்ளவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
நாகை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட் டங்களை உள்ளடக்கிய பாக் வளைகுடா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், தங்கள் பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப் ப டுகின்றனர். இப்படி கைதாகும் மீனவர்களை விடுதலை செய்ய அனைத்து நடவடிக்கைகளை யும் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டு வருகிறார்.
தமிழக மீனவர்கள் கைது தொடர்பான விவரங்களை, பல சமயங்களில் கடிதங்கள் மூலம் பிரதமரின் கவனத்துக்கு முதல் வவர் கொண்டு சென்றார்.
அக்கடிதங்களில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக் கப்பட்ட 77 அப்பாவி மீன வர்கள், அவர்களது மீன்பிடி படகுகளை விடு விக்க மத்திய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியிருந்தார். முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியின் பயனாக, இலங்கை சிறையில் உள்ள நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 77 மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்ய உத்தரவிட்ட து. இதில் முதல்கட்டமாக, 25-ம் தேதி (நேற்று முன்தினம்) 43 மீன வர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மீனவர்கள் ஒருசில நாட்களில் விடுவிக்கப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.