அதிமுகவில் புதிதாக நியமிக்கப் பட்டுள்ள நிர்வாகிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வ ருமான ஜெயலலிதாவை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதிமுக நிர்வாகிகள் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டனர். கட்சியின் பொதுச் செயலாளராக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலை யில், புதிதாக நியமிக்கப்பட்ட நிர் வாகிகள் நேற்று ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக அமைப்புச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான ஆர்.வைத்திலிங்கம், தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைப்புச் செய லாளர்கள் என்.தளவாய்சுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, சுதா கே.பரமசிவன், மீனவர் பிரிவுச் செயலாளர் எம்.சி.முனுசாமி, மகளிரணிச் செயலாளர் விஜிலா சத்தியானந்த், அமைப்புச் செய லாளரும், திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளருமான பி.நாராயணபெருமாள், அனைத் துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனுசாமி ஆகியோர் தனித்தனியாக முதல் வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாவட்டச் செயலாளர்கள்
மாவட்டச் செயலாளர்கள் நா.பாலகங்கா (வட சென்னை தெற்கு), வி.பி.கலைராஜன் (தென் சென்னை வடக்கு), எஸ்.ஆறுமுகம் (காஞ்சிபுரம் மத்தி), என்.ஜி.பார்த்திபன் (வேலூர் கிழக்கு), தூசி கே.மோகன் (திரு வண்ணாமலை வடக்கு), குமரகுரு (விழுப்புரம் தெற்கு), ஜி.வெங்கடாச்சலம் (சேலம் மாநகர்), கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மாநகர்), கே.சி.கருப் பண்ணன் (ஈரோடு புறநகர்), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), தங்க தமிழ்ச்செல்வன் (தேனி), வி.மருதராஜ் (திண்டுக்கல்), எம்.மணிகண்டன் (ராமநாதபுரம்), பாப்புலர் வி.முத்தையா (திருநெல் வேலி மாநகர்), ஏ.விஜயகுமார் (கன்னியாகுமரி) ஆகியோர் ஜெயலலிதாவை தனித்தனியாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
செய்தித் தொடர்பாளர்கள்
அதிமுக செய்தித் தொடர் பாளர்கள் சி.பொன்னையன், பண் ருட்டி எஸ்.ராமச்சந்திரன், பா.வளர் மதி, நாஞ்சில் சம்பத், கோ.சமரசம், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், வைகைச்செல்வன், சி.ஆர்.சரஸ் வதி, தீரன், எம்.கவுரிசங்கரன், கோவை செல்வராஜ், நிர்மலா பெரியசாமி ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை தனித்தனியாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தங்கள் பொறுப்புகளில் சிறப் பாக செயல்பட அவர்களுக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித் தார்.