சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத் தில் முதல்வர் ஜெயலலிதா இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து, விருதுகளை வழங்குகிறார்.
நாட்டின் 70-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப் படுகிறது. டெல்லி செங்கோட்டை யில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.
தமிழக அரசு சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். முன்னதாக 9 மணிக்கு போயஸ் தோட்ட வீட்டில் இருந்து புறப்படும் அவர், 9.10 மணிக்கு போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து அணி வகுப்பு வாகனங்கள் புடைசூழ புனித ஜார்ஜ் கோட் டைக்கு வரும் முதல்வரை தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் மற்றும் அதிகாரிகள் வரவேற்கின்ற னர். முப்படை அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளை முதல்வருக்கு தலைமைச் செய லாளர் அறிமுகப்படுத்துகிறார்.
அதைத் தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரி யாதையை முதல்வர் ஏற்றுக் கொள்கிறார். பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு செல்லும் அவர், அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம் மாண்டமான கொடிக் கம்பத்தில் 9.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்து கிறார். அதன்பிறகு, அங்கு திரண்டிருக்கும் மக்களிடையே சுதந்திர தின உரை ஆற்றுகிறார்.
அதைத் தொடர்ந்து கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த மருத்துவர்களுக்கான விருது, சிறந்த சமூக சேவகருக்கான விருது, இளம் அறிவியலாளர் விருது, சிறப்பாக செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது, அப்துல் கலாம் விருது உட்பட 14 வகை விருதுகளை முதல்வர் வழங்குகிறார். ஆதர வற்றோர் இல்லங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கு கிறார். சுதந்திர தினத்தையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டுள்ளது.
கோட்டை மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் பலத்த பாது காப்பு போடப்பட்டுள்ளது. முதல் வர் வரும் பாதை மற்றும் விழா நடக்கும் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.