நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக இதுவரை எந்தக் கட்சியுடனும் பேச்சு நடத்தவில்லை என்று அக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும் சட்டப்பேரவைக் கொறடாவுடமான சந்திரக்குமார் தெரிவித்தார்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட திருநகர் காலனி நடுநிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம், கிருஷ்ணம்பாளையம் காலனி போர்வல் பணி, கருங்கல்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி கலையரங்கம் உள்ளிட்ட ரூ.36 லட்சம் மதிப்பிலான பணிகள் நிறைவடைந்ததையடுத்து அவற்றை ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. சந்திரக் குமார் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, பாரதிய ஜனதா வுடன் கூட்டணி இறுதி செய்யப் பட்டுவிட்டதாக செய்திகள் வெளி யாகியுள்ளது குறித்து கேட்டதற்கு சந்திரக்குமார், ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி: நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து பேச்சு நடத்த இளைஞரணி தலை வர் சுதீஷ் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மனநிலையை அறிந்து தலைவருக்கு சொல்லும் பணியைத்தான் நாங்கள் செய்துவருகிறோம். நாங்கள் கூட்டணி அமைப்பது குறித்து எந்த கட்சியுடனும் பேச்சு நடத்தவில்லை.
எந்த கட்சியோடும் கூட்டணிக்கு வருகிறோம் என்று நாங்கள் சொல்லவில்லை. தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் எங்க ளோடு கூட்டணியில் இணைய விரும்புகின்றன. அவர்கள் தரப் பில் இருந்து கூட்டணி குறித்த தகவல்கள் வெளியாகி இருக் கலாம். பத்திரிகையில் ஊகத்தின் அடிப்படையில்தான் செய்திகள் வெளியாகின்றன.
அதற்கு தேமுதிக பொறுப்பேற்காது. வெளிநாட்டில் இருந்து விஜயகாந்த் திரும்பிய பிறகு, கூட்டணி குறித்து அறிவிப்பதுதான் இறுதியானதும், உறுதியானதுமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.