தமிழகம்

காமராஜருக்கு பொற்கோயில் கட்ட பூமி பூஜை போட்ட புதுக் கட்சி

அ.அருள்தாசன்

நெல்லையில், காமராஜருக்கு பொற் கோயில் கட்டப் போவதாகச் சொல்லிக் கிளம்பி இருக்கிறது காமராஜர் பெயரில் புதிதாக முளைத்திருக்கும் ஒரு கட்சி.

அகில பாரத காமராஜர் காங்கிரஸ்’ ஜனவரி 6-ம் தேதி இப்படியொரு கட்சியை தொடங்கி தன்னை அதன் நிறுவனராக பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார் சுரேஷ்குமார். இவர்தான் காமராஜருக்கு பொற்கோயில் கட்டுவதற்காக நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மலையன்குளம் - தெய்வநாயகபேரி சாலையில் அடிக்கல் நாட்டி இருக்கிறார்.

இவ்வளவு நாள் இல்லாமல் தேர்தல் நேரத்தில் காமராஜர் மீது ஏன் இந்தத் திடீர் அக்கறை?’ சுரேஷ்குமாரிடமே கேட்டோம். ’’தேர்தலை மனதில் வைத்து நாங்கள் இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. காமராஜர் ஒரு சமூதாய சிற்பி. ஆனால், அவரை சாதிய தலைவராக சுருக்கிவிட்டார்கள். அனைத்து சாதி யினருக்கும் சொந்தக்காரரான அவர் ஒரு அவதாரம். கிங்க் மேக்கர் என்ற பட்டம் யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது.

அந்தப் பட்டத்தைப் பெற்ற காமராஜரின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துபவர்கள் அவருக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை. இதை எல்லாம் மனதில் கொண்டுதான் காமராஜருக்கு பொற்கோயில் கட்ட முடிவெடுத்தோம். பொற்கோயில் கட்டுவதற்காக நாசர் என்ற இஸ்லாமியர் தனக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை வழங்கி இருக்கிறார்’’ என்றார் சுரேஷ்குமார்.

SCROLL FOR NEXT