சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நவம்பர் 7-ம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி சென்னை மாநகராட்சியின் கீழ் இயங் கும் அனைத்து நலவாழ்வு மையங்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் தேசிய புற்று நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. இதில் கர்ப்பப்பை மற்றும் வாய் புற்று நோய், மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை இலவசமாக செய்யப்படும்.