தமிழக மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை சிறை பிடிக்கப்பட்டனர்.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த குற்றத்திற்காக 25 மீனவர்களையும் கைது செய்ததாக அந்நாட்டு கடற்படை செய்தி தொடர்பாளர் கோசல வர்ணகுலசூர்யா தெரிவித்துள்ளார்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறை துறைமுகத்தில் ஒப்படைக்கப்படுகின்றனர்.
மீனவர் பிரச்சினை குறித்து கடந்த வாரம் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாருடன் இலங்கை மீன் வளத் துறை அமைச்சர் ரஜித சேனரத்னே பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு நாட்டு அமைச்சர்களும் பரஸ்பரம் மீனவர்கள் விடுவிக்கப்பட இசைவு தெரிவித்தனர். இதன் அடிப்படையில் தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் குறிப்பிட்ட அளவு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகையச் சூழலில் வரும் 27-ஆம் தேதியன்று இரு நாட்டு மீனப் பிரதிநிதிகள் சந்திப்பு நடைபெறவிருக்கிறத்து என்பது கவனிக்கத்தக்கது.