மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, சென்னை மாநகராட்சி சார்பில் மே மாதமானது தூய்மை இந்தியா மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.
மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில், நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் அனைத்தும், உழைப்பாளர் தினம் இடம்பெற்ற மே மாதத்தை, தூய்மை இந்தியா மாதமாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி சார்பில் மே மாதம் தூய்மை இந்தியா மாதமாக கடை பிடிக்கப்பட உள்ளது. இதை யொட்டி, இன்று (மே 1) மாநகராட்சி யில் பணிபுரியும் 7 ஆயிரத்து 600 நிரந்தர தொழிலாளர்கள் உட்பட 19 ஆயிரத்து 315 துப்புரவு தொழி லாளர்களுக்கு தலா ரூ.100 செல வில் உணவு விருந்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அப் போது தூய்மை இந்தியா இயக் கத்தின் குறிக்கோள்கள் குறித்து தொழிலாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மேலும் ஒவ்வொரு வார்டு வாரி யாக, மெச்சத்தக்க பணி செய்து வரும் தொழிலாளர் ஒருவரைத் தேர்வு செய்து தலா ரூ.1000 ரொக் கப் பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும் உலக சுற்றுச்சூழல் தின மான ஜூன் 5-ம் தேதியிலிருந்து, குப்பைகள் உருவாகும் தொடக்க இடமான வீட்டிலேயே குப்பை களை வகை பிரித்து பெறும் நடைமுறையை உறுதி செய்யும் வகையிலான பயிற்சியும் தொழி லாளர்களுக்கு வழங்கப்பட உள் ளது. இந்த ஒரு மாத நிகழ்வுக்காக ரூ.23 லட்சத்து 24 ஆயிரத்து 650 செலவிடப்பட உள்ளது.