பணப் பரிவர்த்தனைக்கு மட்டு மின்றி, வரலாற்று நாயகர்கள், சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது நாணயங்களை வெளியிட்டு வருவது நம்மில் பல ருக்கு தெரிவதில்லை. அப்படியே தெரிந்துகொண்டாலும், அந்த சிறப்பு நாணயங்களின் பின்னணி யில் உள்ள வரலாற்று தகவல்கள் குறித்து பெரும்பாலானோர் அறிவ தில்லை. அத்தகைய நாணயங் களை சேகரிப்பதுடன், வரலாற்று தகவல்களையும் எழுதி மாணவர் களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த இளைஞர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள குடிசேரி கிராமத் தைச் சேர்ந்தவர் எஸ்.கணியன் செல்வராஜ். ராஜபாளையத்தில் உள்ள கல்வியியல் கல்லூரி யில் எம்.எட்., படித்து வரும் இவர், முக்கிய தலைவர்கள், வரலாற்று நிகழ்வு களையொட்டி வெளியிடப்பட்டுள்ள சிறப்பு நாணயங்களைச் சேகரித்து வருகிறார். அந்த நாணயங்கள் வெளியிடப்பட்டதன் முக்கியத்து வம் குறித்த விவரங்களை எழுதி வைத்து பள்ளி மாணவர்களுக்கு காட்சிப்படுத்தி விளக்கம் அளிக்கி றார்.
இதுகுறித்து எஸ்.கணியன் செல்வராஜ் கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை ஆசிரியராக பணிபுரிந்தேன். அரசுப் பணிக்கான தேர்வு ஒன்றில், சிறப்பு நாணயங் கள் எதற்காக வெளியிடப்படுகின் றன என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாணய சேக ரிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கி னேன். குறிப்பாக, சிறப்பு நாணயங் கள் எதற்காக வெளியிடப்பட்டன என்ற விவரங்களைச் சேகரித்து வருகிறேன். தற்போது என்னிடம் 120 நாணயங்கள் உள்ளன.
மகாவீரர் ஞானம் பெற்று 2,600 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தைக் குறிக்கும் வகையில் 2001-ம் ஆண்டு 5 ரூபாய் நாண யம் வெளியிடப்பட்டது. பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண் டும் என்பதற்காக 1990-ம் ஆண் டில் ஒரு ரூபாய் நாணயம் வெளி யிடப்பட்டது. பார்வையற்றோர் களுக்கான எழுத்து முறையை உருவாக்கிய பிரெய்லியின் 200-ம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில் 2009-ம் ஆண்டு ஒரு ரூபாய் நாண யம் வெளியிடப்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாத்மா காந்தி இந்தியா வந்து 100 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் காந்தியடிகள் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயம் 2015-ம் ஆண்டு வெளியிடப் பட்டது. 1995-ம் ஆண்டு நடை பெற்ற 8-வது உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவர் உருவப் படத்துடன் கூடிய ஒரு ரூபாய், 2 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன. ரிசர்வ் வங்கியின் 75-ம் ஆண்டை கொண்டாடும் வகையில் 2010-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் இலச்சினையைக் கொண்ட 1, 2, 5, 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுபோன்று, ஒவ்வொரு நாண யத்தின் வெளியீட்டுக்கும் ஒரு காரணம் உள்ளது. எனவே, நாணயங்களைப் பார்க்கும்போது அது என்ன நோக்கத்துக்காக வெளி யிடப்பட்டது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
நான் சேகரித்துள்ள சிறப்பு நாணயங்களைப் பள்ளி, கல்லூரி, கல்வி பயிற்சி மையங்களில் காட் சிக்கு வைத்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்து வருகிறேன். என்னிடம் உள்ள நாணயங்களைப் பெறும் பள்ளி ஆசிரியர்கள், அதை அவர்களின் மாணவர்களுக்கு காண்பித்து விழிப்புணர்வு ஏற் படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.