திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் நகைக் கடை ஒன்றில் 60 கிலோ மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
பாளையங்கோட்டையின் முருகன் குறிஞ்சி பிரதான சாலையையை ஒட்டி பிரபலமான அழகர் ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடை உள்ளது. இக்கடையில் வியாழக்கிழமை நள்ளிரவுக்கு பின், 4 பேர் சேர்ந்த கும்பல் நுழைந்து கடையின் ஷட்டரை துளையிட்டு 60 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் எடுத்துச் செல்லவில்லை..
கொள்ளையடிக்கப்பட்ட கடையின் அருகேவுள்ள வணிக வளாகத்தில் கட்டிடப் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து கொண்டு இருந்தது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த சிலர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றன. தடயவியல் நிபுணர்கள் குற்றவாளிகளின் ரேகைகளை பதிவு செய்துள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட கடையிலுள்ள, சிசிடிவி கேமிராவில் கொள்ளையடிக்கப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.