தமிழகம்

அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல்: தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் போலீஸ் - காவல் அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை

செய்திப்பிரிவு

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையைத் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் இருக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினை தமிழக அரசி யலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஓ.பன்னீர்செல் வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இடையே மோதல் அதிகரித்து வருகிறது. ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தும், ஆளுநர் காலம் தாழ்த்துவதால் ‘பொறு மைக்கும் எல்லை உண்டு. அடுத்து செய்ய வேண்டியதை செய்வோம். ஆளுநர் தனது முடிவு தெரிவிக்காவிட்டால் மாற்று வழியில் போராட்டம் நடத்துவோம்’ என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் சசிகலா பேட்டி அளித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் களும் சசிகலா ஆதரவாளர்களும் மோதலில் ஈடுபடலாம் என்றும் அதனால், வன்முறை சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் போலீஸாருக்கு தகவல்கள் வந்தன. சசிகலா தரப்பினர் வன் முறையை தூண்டிவிட திட்டமிட்டு இருப்பதாகவும் உளவுப்பிரிவு போலீஸார் எச்சரித்தனர்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளால் வன் முறை சம்பவங்கள் நடைபெறா மல் தடுக்க தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கடந்த 2 நாட்களாக நடந்துவரும் வாகன சோதனை மற்றும் விடுதிகளில் நடத்தப்பட்டு வரும் சோதனையைத் தொடர்ந்து மேற் கொள்ள அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.

சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி காவல்துறை அதி காரிகளுக்கு டிஜிபி டி.கே.ராஜேந் திரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனையும் நடத்தி னார். பிரச்சினைக்குரிய பகுதி களில் கூடுதல் போலீஸார் பாது காப்புக்காக நிறுத்தி வைக்கப்பட் டுள்ளனர்.

கிண்டி ஆளுநர் மாளிகை, எம்எல்ஏக்கள் தங்க வைக்கப் பட்டிருக்கும் கூவத்தூர் விடுதி, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம், சசிகலா வசித்து வரும் போயஸ் தோட்ட வீடு, ஆர்.ஏ.புரத்தில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு, தி.நகரில் உள்ள பாஜக அலு வலகம் உட்பட சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. சென்னையில் வாகன சோதனை, ரவுடிகள் கண்காணிப்பு, விடுதிகளில் சோதனை போன்ற பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக நடத்தப்படுகிறது. நகரின் பாது காப்பு குறித்து காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், அதிகாரிகளுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினார்.

SCROLL FOR NEXT