இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மறைந்த தலைவர் காயிதே மில்லத்தின் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலை வர்கள் நேற்று மரியாதை செலுத்தினர்.
காயிதே மில்லத்தின் பிறந்த நாளை முன்னிட்டு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா பெரிய மசூதி வளாகத்திலுள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் நேற்று காலை தமிழக முதல்வர் கே.பழனிசாமி மலர்போர்வை அணி வித்து மரியாதை செலுத்தினார். அவ ருடன் அமைச்சர்கள் கே.ஏ.செங் கோட்டையன், டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள் ளிட்டோரும் மரியாதை செலுத் தினர்.
அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் இ.மதுசூதனன், நாடாளுமன்ற உறுப் பினர் மைத்ரேயன், எம்எல்ஏ செம்மலை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் கே.எம்.காதர்மொகிதீனும் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதன் தலைவர் சு.திரு நாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமாகா துணைத் தலைவர் ஞானதேசிகன், தேமுதிக தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி, மதிமுக சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளர் முராத் புகாரி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.