தமாகா தலைவர் ஜி.கே.வாசன் புதுக்கோட்டையில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியது: பெட்ரோல், டீசல், தக்காளி, பருப்பு ஆகியவற்றின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யுள்ளார். இவற்றை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரவக்குறிச்சி, தஞ்சா வூர் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்தது, தேர்தல் ஆணையத்தின் தோல்வியைக் காட்டுகிறது. மக்க ளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என்றார்.