முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், கடந்த 13-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. மேலும், தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக தன்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதாக சிறைத்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், வேலூர் சிறை யில் உண்ணாவிரதம் இருக்கும் நளினியை அவரது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.
பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘வேலூர் சிறையில் நளினியை, சிறைத் துறையினர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துகின்றனர்.
இதனால், தன்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளார். வேறு சிறைக்கு மாற்றும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவ தாக தெரிவித்துள்ளார்.
துன்புறுத்தலில் ஈடுபட்ட சிறைத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நளினியின் விடுதலை முழுக்க முழுக்க அரசி யல் தொடர்புடையது என்பதால், சர்வதேச நீதிமன்றத்தை விரை வில் நாட உள்ளோம்’’ என்றார்.