தமிழகம்

ரூ.13 லட்சம் நகைகள் திருடிய உதவி இயக்குநர் கைது

செய்திப்பிரிவு

பெங்களூரை சேர்ந்த அத்தீஸ்வரன் கடந்த 14-ம் தேதி சென்னை வடபழனியில் தனியார் ஹோட்ட லில் தங்கியுள்ளார்.

இவர் தனது 2 வைர கைச்செயின், 2 தங்க மோதிரம், ஒரு கைக்கடிகாரத்தை வைத்து விட்டு தூங்கியுள்ளார். மறுநாள் பார்த்தபோது அவை காணாமல் போயிருந்தன.

போலீஸ் விசாரணையில், உதவி இயக்குநரான காரைக்கால் மணிகண்டன் என்ற அரிபிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

ஹோட்டலில் நடந்த நண்பனின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மணிகண்டன் அத்தீஸ்வரன் தங்கியிருந்த அறை லேசாக திறந்து கிடப்பதை பார்த்து உள்ளே சென்று வைர, தங்க நகைகள் மற்றும் செல்போன்களை திருடிச்சென்றது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

          
SCROLL FOR NEXT