தமிழகம்

சட்டவிரோத பணப் பரிமாற்றம்: தமிழகம், காஷ்மீர், டெல்லியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை

செய்திப்பிரிவு

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்களை தூண்டி விடுவதற்காக வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணப் பரி மாற்றம் நடந்திருப்பது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழகம், டெல்லி, காஷ்மீரில் தேசிய புலனாய்வுத் துறை யினர் ரகசிய சோதனை நடத்தி யுள்ளனர்.

சட்டவிரோதப் பணப் பரி மாற்றம் செய்ததாக காஷ்மீர் பிரிவினைவாத குழுவைச் சேர்ந்த அகமது ஷா என்பவர் மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய அமைப்பு களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மீது டெல்லி அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். இத்தாலி உள் ளிட்ட பல நாடுகளில் இருந்து இந்த அமைப்பினருக்கு சட்டவிரோத மாக பணம் வந்துள்ளதாகவும், 300-க்கும் அதிகமான பரிமாற்றங் கள் மூலம் பணம் அனுப்பப் பட்டிருப்பதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

இந்தப் பணப் பரிமாற்றங் களுக்கு உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து பல்வேறு சிறு அமைப்புகள் உதவி செய்திருப் பதும், காஷ்மீரில் உள்ள பலருக்கு இந்தப் பணம் அனுப்பப்பட்டிருப் பதும் அமலாக்கத் துறை அதிகாரி கள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதி களிலும் வன்முறைச் சம்பவங் களைத் தூண்டிவிடுவதற்கு இந்தப் பணத்தை அவர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என் றும் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் வந்தது தொடர்பாக தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். பணப் பரிமாற்றம் குறித்து ஜம்மு காஷ்மீர், டெல்லி, தமிழகத்தில் குறிப்பிட்ட சிலரது வீடுகளில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ரகசிய சோதனை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT