சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு காவல் ஆணையர் மற்றும் தெற்கு ரயில்வேக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படி சென்னை பெருநகர காவல் ஆணை யர் மற்றும் தெற்கு ரயில்வே துறை ஆகியவற்றுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.
சென்னை போலீஸ் மற்றும் ரயில்வே போலீஸ், கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.
அந்த பதில் திருப்தி அளிக்காத பட்சத்தில், ஆணையம் புதிதாக ஒரு குழுவை அமைத்து விசாரணை நடத்தும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.