தமிழகம்

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு

செய்திப்பிரிவு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக, டெல்டா பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 5800 கன அடிகளில் இருந்து 2000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பணிதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை நிலவர்ப்படி அணையின் நீர்மட்டம் அளவு 79.08 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 5,848 கன அடியாக உள்ளது.

SCROLL FOR NEXT