தமிழகம்

மயிலாப்பூரில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி மஹோத்சவம் தொடங்கியது: ஆகஸ்ட் 28 வரை நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

மயிலாப்பூர் நந்தலாலா கலாச்சார மையத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந் தியை முன்னிட்டு மஹோத் சவம் நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 28-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

நந்தலாலா சேவா சமிதி அறக் கட்டளை சார்பில் ‘ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி மஹோத்ஸவம்’ தொடக்க விழா மயிலாப்பூர் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா கலாச்சார மையத்தில் நேற்று நடைபெற்றது.

தொடக்க விழாவில் மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சி களைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு நந்தலாலா சேவா சமிதி அறக்கட்டளையின் நிறுவனர் மதிஒளி சரஸ்வதி முன்னிலை வகித்தார்.

இதையடுத்து, பேபி ரித்வா ஈஷ்வர் நடன நிகழ்ச்சி, கிருஷ்ணாஞ் சலி நடனப்பள்ளி ஆசிரியர் காயத்ரி கிருஷ்ணவேணி லட்சுமணன், மாணவர்களின் ‘யதுநந்தன கோபாலா’ நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மஹோத்ஸவ நிகழ்வுகள் குறித்து விழா ஒருங்கிணைப் பாளர்கள் கூறியதாவது:

நந்தலாலா சேவா சமிதி அறக் கட்டளை சார்பில்  கிருஷ்ண ஜெயந்தி மஹோத்ஸவம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், ஆகஸ்ட் 25 மாலை 5 மணிக்கு பாலகிருஷ் ணனைத் தொட்டிலில் இடும்  கிருஷ்ண ஜனன வைபவம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக் காணோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இதன்பிறகு, ஆகஸ்ட் 26-ம் தேதி மாலை 6 மணிக்கு கோவிந்த பட்டாபிஷேம் நடைபெற உள்ளது. இதுதவிர, ஆகஸ்ட் 27-ம் தேதி காலை 8.30 மணிக்கு குசேலர் வைபவமும், காலை 9.30 மணிக்கு உறியடி உற்சவமும், மாலையில் பாலகிருஷ்ண ஊர்வலம், ஒய்யாலி நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. இறுதிநாளான வரும் 28-ம் தேதி விடையாற்றி உற்சவம் திருமஞ்சனம், ‘கில் ஆதர்ஷ்’ பள்ளிக் குழந்தைகளின் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.nandalala.org என்ற இணையதளத்திலும், 9566074322, 9655325234, 9840176888 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

நந்தலாலா சேவா சமிதி அறக்கட்டளை சார்பில் ‘ ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி மஹோத்ஸவம்’ சென்னை மயிலாப்பூரில் உள்ள நந்தலாலா கலாச்சார மையத்தில் நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ், நந்தலாலா சேவா சமிதி அறக்கட்டளையின் நிறுவனர் மதிஒளி சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT