அதிமுக சார்பில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடக்கும் இப்தார் விருந்தில் முதல்வர் ஜெயலலிதா பங் கேற்கிறார்.
அதிமுக சார்பில், ஆண்டு தோறும் ரம்ஜானை முன்னிட்டு, இப்தார் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதன்படி இன்று மாலை இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மைய கன்வென்ஷன் அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு இப்தார் விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவுள்ளதாக அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித் துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி இதே இடத்தில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.