தமிழகம்

ஓபிஎஸ் அணிக்கு செல்லாமல் தடுக்க பேரம்: சூலூர் எம்எல்ஏ மறுப்பு

செய்திப்பிரிவு

கூவத்தூரில் தங்கியிருந்த போது சிலருக்கு நகை, பணம் கொடுத்ததாக நான் கூறியதுபோல வெளியான வீடியோ பொய்யானது என சூலூர் எம்எல்ஏ கனகராஜ் தெரிவித்துள்ளார்.

வீடியோ சர்ச்சை குறித்து சூலூர் எம்எல்ஏ கனகராஜ் ‘தி இந்து’-விடம் கூறும்போது, ‘கூவத்தூரில் எப்படி இருந்தீர்கள் என்பது குறித்து நிருபர்கள் கேட்டார்கள். அரசைக் காப்பாற்றுவதற்காக கூவத்தூரில் பாதுகாப்பாக இருந்தோம். ஆளுநரை சந்திப்பதற்காக அங்கு காத்திருந்தோம் என்றுதான் கூறினேன்.

மற்றபடி நகை, பணம் கொடுத்தார்கள் என நான் கூறவில்லை. நான் கூறியது போல வெளியான வீடியோ பொய்யானது. நான் அதை பார்க்கக்கூட இல்லை. இந்த குற்றச்சாட்டு குறித்து எனக்கு எதுவுமே தெரியாது’ என்றார்.

SCROLL FOR NEXT