தமிழகம்

எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்: கடலோரக் காவல்படை அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கிழக்கு பிராந்திய கடலோரக் காவல்படை கமாண்டர் சத்ய பிரகாஷ் சர்மா அறிவுறுத்தியுள்ளார்.

கடலோரக் காவல்படை வார கொண்டாடத்தின் ஒருபகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே ‘புரோ சேலஜ்ஞ் 2014’ என்ற பீச் வாலிபால் போட்டி செவ்வாய்க்கிழமை முதல் 5 நாட்கள் நடக்கவுள்ளது.

இதையொட்டி கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய கமாண்டர் சத்ய பிரகாஷ் சர்மா சென்னையில் நிருபர்களுக்கு திங்கள்கிழமை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க தமிழக, ஆந்திர கடலோரப் பகுதிகளில் 30 படகுகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன. புதிதாக 13 ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. கப்பலில் எண்ணெய் எடுத்து வரும்போது எண்ணெய்க் கசிவால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடலில் தத்தளிக்கும் மீனவர்களும், மக்களும் மீட்புப் பணிக்காக மண்டபம் மையத்தை அணுகலாம். சர்வதேச எல்லையைத் தாண்டிச் செல்வது, மீன்பிடிப்பது குற்றம். சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த

தாக இலங்கை மீனவர்கள் 308 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 59 மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு சத்யபிரகாஷ் சர்மா கூறினார்.

SCROLL FOR NEXT