தமிழகம்

400 டன் எடையில் 64 அடி உயர விஷ்ணு சிலை அமைக்க பிரம்மாண்ட கல் பெங்களூரு பயணம்: வேலூர், கிருஷ்ணகிரி வழியாக செல்கிறது

செய்திப்பிரிவு

வந்தவாசி அருகே கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறையை வெட்டி எடுத்து 400 டன் எடை யில் 64 அடி உயரத்தில் விஸ்வ ரூப மகா விஷ்ணு சிலை செதுக்கப் பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட கல் கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூரு புறப்பட உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் கோதண்ட ராம சாமி கோயில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கோயிலில் 108 அடி உயரத் தில் விஸ்வரூப மகாவிஷ்ணு மற்றும் ஆதிசேஷன் சிலை அமைக்க கோயில் அறக்கட்டளை மூலம் முடிவு செய்யப்பட்டது. அத்தகைய பிரம்மாண்ட சிலைகளை செதுக்கு வதற்காக கற்களை செயற்கைக் கோள் மூலம் தேடினர்.

இதற்கான கல், திருவண்ணா மலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறைக் குன்றில் இருப்பது தெரியவந்தது. பின்னர், மத்திய, மாநில அரசுகளிடம் அனுமதிப் பெற்று கற்களை வெட்டி எடுத்து சிலைகளை வடிவமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப் பட்டது.

64 அடி நீளம், 26 அடி அகலத் தில் 11 முகங்கள், 22 கைகளை கொண்ட விஸ்வரூப மகா விஷ்ணு சிலை மற்றும் 24 அடி நீளம், 30 அடி அகலத்தில் ஆதிசேஷன் சிலையை (7 தலை பாம்பு) ஸ்தபதிகள் செதுக்கத் தொடங்கினர்.

108 அடி உயரம்

மகா விஷ்ணு மற்றும் ஆதி சேஷன் சிலையை ஒன்றாக இணைத்து கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பீடத்துடன் சேர்த்து அதன் மொத்த உயரம் 108 அடியாகும். 400 டன் எடையில் மகா விஷ்ணு சிலையும், 230 டன் எடையில் ஆதிசேஷன் சிலை யும் உருவாக்கப்படுகிறது. மகா விஷ்ணுவின் முகம், சங்கு சக்கரம் மற்றும் கைகள் ஆகியவை மட்டுமே செதுக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள பாகங்கள் மற்றும் ஆதிசேஷன் சிலை ஆகியவை பெங்களூருக்கு கொண்டு சென்ற தும் வடிவமைக்கப்படும்.

சிலைகளை செய்வதற்கான பிரம்மாண்ட கற்கள், 170 மற்றும் 96 டயர்களைக் கொண்ட கார்கோ லாரிகள் மூலம், இன்று அல்லது நாளை வந்தவாசி, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு கொண்டு செல்லப்படும்.

அதிக பாரம் கொண்ட கார்கோ வாகனங்கள் செல்வதற்கான அனு மதியை மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அறக்கட்டளை நிர்வாகிகள் பெற்றுள்ளனர். செல்லும் வழியில் உள்ள பாலங்களின் உறுதித் தன்மையை வல்லுநர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன்படி, பாலங் களுக்கு அடியில் கூடுதல் ஜாக்கிகள் பொருத்தப்படுகின்றன. சில இடங் களில் மணல் மூட்டைகளை அடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கல் சிலைகளை பார்க்க வந்தவாசி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்ட தால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT