தமிழகம்

ஆன்லைன் லாட்டரி விற்பனை போலீஸார் சோதனை

செய்திப்பிரிவு

சென்னையில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறும் இடங்களில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற் பனை தடை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் வண்ணாரப்பேட்டை, வில்லிவாக்கம், அயனாவரம், எழும் பூர், பாரிமுனை, கோயம்பேடு, வட பழனி உட்பட பல இடங்களில் போலீ ஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

இதில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்தவர்கள், ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்து குலுக்கள் நடத்தியவர்கள் என 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT