தமிழகம்

கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு நிதி: அமைச்சர் வழங்கினார்

செய்திப்பிரிவு

திருவொற்றியூர் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும் பத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை பள்ளிக்கல்வி, விளை யாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றி யூர் அருகே உள்ள திருச்சினாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் சங்கர்(45). இவருடன் தங்கராஜ், அங்கப்பன், சுமன் ஆகிய மீனவர்கள் படகு ஒன்றில் கடந்த 9-ம் தேதி இரவு திருச்சினாங்குப்பம் பகுதியில் கடலில் மீன் பிடித்தனர்.

அப்போது ஏற்பட்ட கடற்சீற்றத்தால் அலையில் படகு கவிழ்ந்தது. இதில், கடலில் விழுந்த மீனவர்களில் சங்கர் மட்டும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மற்றவர்கள் உயிர் தப்பினர்.

இந்நிலையில் சங்கர் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதன்படி அமைச்சர் பெஞ்சமின் சங்கரின் மனைவி மைதிலியிடம் காசோலையை நேற்று வழங்கினார்.

இதில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, அம்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் வீரப்பன், திருவொற்றியூர் வட்டாட்சியர் என்.எஸ்.சிராஜ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT