தமிழகம்

கர்நாடகாவை சோனியா, அமித்ஷா கண்டிக்காதது ஏன்?- பழ.நெடுமாறன் கேள்வி

செய்திப்பிரிவு

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரும் பாஜகவைச் சேர்ந்தவருமான ஜெகதீஷ் ஷெட்டர், காவிரி நீரை தமிழகத்துக்கு தர முடியாது என தீர்மானத்தை முன்மொழிய முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான சித்தராமையாவின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்துக்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும் அறைகூவல் விடும் வகையில் தங்களது கட்சிகள் நடந்துகொள்வதைக் கண்டிக்க பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் முன்வராதது ஏன்? என கூறியுள்ளார்.

தனித்துப் போட்டி

தமிழர் தேசிய முன்னணியின் தலைமை செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதுகுறித்து ‘தி இந்து’விடம் பழ.நெடுமாறன் கூறியதாவது:

பல்வேறு தமிழ் அமைப்புகளை ஒன்றிணைத்து தமிழர் தேசிய முன்னணி என்ற கட்சியை 2014 ஜூலையில் தொடங்கினோம். தற்போது நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளோம். வெற்றி வாய்ப்புள்ள இடங்களை தேர்வு செய்து போட்டியிடுவோம் என்றார்.

SCROLL FOR NEXT