தமிழகம்

நாகை வேளாங்கண்ணியில் பெருவிழா தொடக்கம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

நாகை மாவட்டம் வேளாங்கண் ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி யது.

பிரசித்தி பெற்ற இந்த பேராலயத்தில், கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் வழிபாடு நடத் துவர். இங்கு, ஆண்டுப் பெருவிழா விமரிசையாக நடைபெறும் நடப் பாண்டு ஆண்டுப் பெருவிழாவை யொட்டி, தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், நேற்று மாலை திருக்கொடியை புனிதம் செய்துவைத்தார்.

பின்னர், வேளாங்கண்ணி கடைத் தெரு, ஆரிய நாட்டுத் தெரு, கடற்கரைச்சாலை வழியாக திருக் கொடி ஊர்வல மாக கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, பேரா லயம் அருகேயுள்ள கொடி மரத் தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், பேராலய அதிபர் பிரபாகர் மற்றும் உதவிப் பங்குத் தந்தைகள் கொடி யேற்றினர்.

இதையடுத்து, வாணவேடிக்கை நடத்தப்பட்டது. கொடிமரத்தை நோக்கி பக்தர்கள் காசுகளை வீசியெறிந் தனர். பின்னர், பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு ஆராதனை, நற்கருணை ஆசிர் வாதம், திருப்பலி நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இதில், பங்குத் தந்தைகள் சூசைமாணிக்கம், ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்தை முன்னிட்டு பேராலயம் முழுவதும் பலவண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. விழா முடிந்த பின்னர், வெளியூர்களில் இருந்து பாத யாத்திரையாக வந்திருந்த பக்தர்கள், அவரவர் ஊர்களுக்குத் திரும்பினர்.

விழாவையொட்டி, பேராலயம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை, தேவாலய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் செய்திருந்தனர்.

செப்டம்பர் 7-ம் தேதி வரை தினமும் மாதா கொடியேற்றம், பல்வேறு மொழிகளில் திருப்பலி, அன்னையின் திருச்சொரூப ஆசிர்வாதம், நோயாளி களை மந்திரித்தல், மாதா மன்றாட்டு நிகழ்ச்சி, நவநாள் ஜெபம், மறையுரை, திவ்ய நற்கருணை ஆசிர்வாதம், தேர் பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி செப்டம்பர் 7-ம் தேதி இரவு நடைபெறவுள்ளது.

SCROLL FOR NEXT